• Jan 19 2025

ஜமீன்தார் மருமகன் ஆகிறாரா நடிகர் சித்தார்த்? புடிச்சாலும் புளியங்கொம்பு தான்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடிகை அதிதிராவ் ஹைத்ரியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வரப்போகும் மாமனார் ஒரு ஜமீன்தார் என்று கூறப்படுகிறது.

நடிகர் சித்தார்த் கும்பகோணம் பகுதியில் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியில் பிறந்தவர்.  அதன் பின்னர் அவர் சென்னைக்கு வந்து மணிரத்னம் உதவியாளராக இருந்தார். இந்த நிலையில் தான் ஷங்கர் கண்ணில் தற்செயலாக பட்டுவிட அதன் பிறகு ’பாய்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் வாய் கொஞ்சம் ஓவர் என்பதால் தான் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் மிஸ் செய்தார் என்றும் கூறப்பட்டது.

 இந்த நிலையில் மேக்னா என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்த சித்தார்த், அவரை விவாகரத்து செய்து கொண்டவுடன் ஸ்ருதிஹாசன் மற்றும் சமந்தாவுடன் காதலில் விழுந்தார். அதன் பின் இரண்டு காதலும் பிரேக்கப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிதி உடன் காதலில் இருந்த சித்தார்த் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்து கொண்டார். விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிதிராவ் ஹைத்ரியின் தாத்தா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சிற்றரசன் போல் இருந்தவர் என்றும் நம்மூரில் ஜமீன்தார் போல் அவர் அங்கு ஒரு பெரிய பதவிகளில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.  எனவே  ஒரு ஜமீன்தார் வீட்டு மருமகனாக தான் சித்தார்த் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement