• Jan 19 2025

பிக்பாஸ் ஆரி மாதிரி அமைதியா இருந்து டைட்டில் வின் பண்ணுவார்! Police Station-ல ரட்சிதா சொன்னது எல்லாம் பொய்! தினேஷின் பெற்றோர் பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 77 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது. 

பிக் பாஸ் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்த போட்டியாளர் தான். தினேஷ். இவருக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள தினேஷ் பற்றி அவரது பெற்றோர் பேட்டியொன்றை அளித்துள்ளனர். அதன்படி அவர்கள் கூறுகையில்,


முதலாவதாக, பிக் பாஸ் வீட்டிலுள்ள தினேஷுக்கு யார் தடங்கலா இருக்கிறாங்க? என கேட்க, அதற்கு மாயாவும் பூர்ணிமாவும் தான் இப்ப  உள்ள தினேஷுக்கு தடையா இருக்காங்க என்று தினேஷின் அம்மா சொல்கிறார். ஆனா தினேஷும் அவர்களுக்கு தடங்கலா இருக்கலாம் எனவும் சொன்னார்.

மேலும், பிக் பாஸ் ஆரம்பத்தில் தினேஷுக்கு பிரதீப் தான் பிடிக்கும். எனக்கும் பிரதீப் தான் பிடிக்கும். அவர் நல்லா விளையாடி வந்தாரு. அதனால பிக் பாஸ்  விரும்பி பார்ப்போம். அப்போ பிரதீப்க்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்துச்சு. ஆனா உள்ள இருக்கிற போட்டியாளர்கள் தான் ஏதோ பிளான் பண்ணி, அவர வெளியே அனுப்பிட்டாங்க. 


இதுவரைக்கும், தினேஷ் கெட்ட வார்த்தை எல்லாம் பேசினதே கிடையாது. அப்படி பேசி பார்த்ததும் இல்ல நாங்க.. ஆனா பிக் பாஸ் வீட்டில் தான் அப்படி பேசினார். எங்களுக்கே ஆச்சரியமா போயிட்டு.. மேலும், விசித்ரா கூட ஆரம்பத்துல தினேஷ் நல்லாத்தான் இருந்தார். ஆனால் இடையில அந்த ஜெயில் மேட்டர் வந்துச்சு தானே.. அதனால தான் கொஞ்சம் கசப்பா போயிட்டு என்று நாங்க நினைக்கிறம்..

இதைத் தொடர்ந்து தினேஷின் கல்யாண வாழ்க்கை பற்றியும், தினேஷ் ரட்சிதாவை இனி நடிக்க வேணாம் என்று சொன்னதால தான்  அவங்களுக்குள்ள சண்டை வந்துச்சு என்று சொல்லுறாங்க.. இது உண்மையா என்று கேட்க,


அப்படி முதல்ல பேசுறதே தவறு என தினேஷின் அப்பா சொல்கிறார். மேலும்,  கொரோனா டைம்ல எங்களுக்கு கொஞ்சம் பொருளாதார பிரச்சனையா இருந்துச்சு.. அந்த டைம்ல ரெண்டு மாச வாடகையே கட்டு என்று சொன்னோம். அதுதான் ரொம்ப தப்பா போயிட்டு.. அதுல வெடிச்ச பூகம்பம் தான்.. யார்ட கதைய கேட்டு இப்படி எல்லாம் பண்ணுறாங்க என்று தெரியல.. எனக்கு அந்த விசயத்தோட மனசு ரொம்ப சங்கடமா போயிட்டு...

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் காதலிச்சு கல்யாணம் பண்ணினாங்க.. அதுபோலவே சீரியலில் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் பண்ணாங்க. ஆனால்.. நாச்சியார்புரம் மட்டும் அவர்களுக்கு நடிக்க விருப்பமில்லை. நாங்க சொல்லித்தான் அவங்க நடிச்சாங்க..


அவங்கள நாங்க ஒரு நாளும் நடிக்க வேண்டாம் என்று தடுத்ததில்லை.. அதுபோல ஷோக்கும் போக வேண்டாம் என்றும் ஒரு நாளும் சொன்னதில்ல. சில நேரம் நானும் அவங்க கூட போவன், ரட்சிதாக்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுப்பேன். என்று தினேஷின் அம்மாவும் மருமகளை விட்டுக் கொடுக்காமல் கதைத்தார். மேலும். நாங்களும் அப்படி தான்.. தினேஷும் அப்படித்தான்... ரட்சிதாவுக்கு தொழில் ரீதியா எந்த தடையுமே நாங்க கொடுக்க இல்லை என்றார்.


ஆனாலும், முதல்ல ரட்சிதா அப்படி இல்லை. இப்ப சமீப காலமா தான் அவங்க ரொம்ப மாறிட்டாங்க. தினேஷும் காசு விசயத்துல அவங்க கிட்ட ஒன்னுமே கேட்டதில்லை... நீங்க வேணும்னா தினேஷ்ட பேங்க் அக்கவுண்ட் செக் பண்ணி பாருங்க... ஆனா ரட்சிதா யார் யாருக்கு எவ்வளவு அனுப்பி இருக்காங்க என்று நாம சொல்ல முடியும்.. ஆனா நாம அப்படி பண்ண மாட்டோம்.. அவங்க சம்பாதிக்கிறாங்க.. அவங்க காசு.. ஆனா ஒரு நாள் கூட காசு விசயத்துல தினேஷ் பிரச்சனை கொடுத்தது இல்லை.

சினிமாவில் நடிக்கலாம் ஆனால் ரியல் லைப்ல நடிக்க கூடாது. அவங்க போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னதெல்லாம் உண்மையே கிடையாது. என்று தினேஷின் பெற்றோர் சொல்லி உள்ளனர்.

இறுதியாக, பிக் பாஸ் வீட்டுல ஆரி மாதிரி அமைதியா இருந்துட்டு.. எங்க பிள்ள நல்லா ஜெயிச்சுட்டு வர வேண்டும் என்றும் தினேஷின் பெற்றோர் சொல்லி உள்ளனர்.

Advertisement

Advertisement