• May 17 2024

காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட்... திருவள்ளுவர் பயோபிக் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் கொட்டாச்சி. இப்படத்தில் இவரின் நடிப்பு ஹிட்டானதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 

இதை தொடர்ந்து யூத், பெண்ணின் மனதை தொட்டு, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், பிரபல காமெடி நடிகர் வடிவேலு, விவேக் போன்றவர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு 'வறண்ட விழிகள்' என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். எனினும், நடிகர் வடிவேலு தனது படவாய்ப்புகளை தட்டி பறித்ததாகவும் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.


தற்போது இவரை தொடர்ந்து இவரது மகள் மானஸ்வி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இவர் கொட்டாச்சி மகளா என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு குறுகிய காலத்திற்குள் புகழ் பெற்றார்.

இந்த நிலையில், நடிகர் கொட்டாச்சி திருவிளையாடல் படத்தில் நடித்த நாகேஷின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளாராம்.


அதாவது, திருவிளையாடல் தருமியாக  கொட்டாச்சி திருவள்ளுவர் வரலாற்று காவியத்தில் நடிகர் நாகேஷ் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதன்பொருட்டு தனது நீண்ட நாள் கனவு பலித்தது என கடவுளுக்கு நன்றியும் சொல்லியுள்ளார்  கொட்டாச்சி.

Advertisement

Advertisement