• Jan 19 2025

பிரபல சினிமா நட்சத்திரங்களை தாக்கிய 20 பேர்? நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

கன்னடத்  திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஹர்ஷிகா பூனச்சா. இவர் புவன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரும் புகழ் பெற்ற நடிகராக காணப்படுகிறார்.

இந்த நிலையில்,  புதுமண தம்பதிகளான இவர்கள் ஹோட்டல் ஒன்றுக்கு காரில் சென்ற நிலையில், அங்கு வந்த இரண்டு பேர் அவர்களிடம் தகராறு செய்துள்ளார்கள் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்ற அவர்கள், இரவு உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு வந்துள்ளனர். இவ்வாறு காரில் இருந்து புறப்படும் போது அங்கு வந்து இரண்டு பேர் அவர்களிடம் தகராறு செய்துள்ளார்கள்.


மேலும் ஹர்ஷிகா பூனச்சா மற்றும் அவரது கணவன் புவனை அவர்கள் தாக்கிய நிலையில், அவர்கள் இது தொடர்பில் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது பற்றி விசாரித்த போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் நடிகை ஹர்ஷிகா பூனச்சா -புவன்  அளித்த பேட்டியில், பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட காரில் சென்றோம். அங்கு சாப்பிட்டு விட்டு மீண்டும் காரை எடுக்க வந்தபோது எங்களை இரண்டு பேர் தாக்கினார்கள். அவர்களுடன் 20 பேர் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறியுள்ளார்கள்.

Advertisement

Advertisement