• Dec 28 2024

இனி உங்க பாட்சா பலிக்காது ரோகிணி.. மீனாவுக்கு ஸ்ருதி கொடுத்த ரெட் அலர்ட்?

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், மனோஜுடன் சண்டை போட்டுவிட்டு ரோகிணி அம்மா வீட்டுக்கு செல்கின்றார். அங்கு அவருடைய மடியில் விழுந்து அழுகின்றார். 

இதன் போது ரோகிணியின் அம்மா இப்படி சண்டை போட்டுட்டு வந்திருக்கக் கூடாது.. உங்க மாமியாருக்கு இன்னும் கோபம் அதிகமாக வரும்.. க்ரிஷ்க்கும் இதை புரிந்து கொள்கின்ற வயசு இல்லை.. அதனால் நீ வீட்டுக்கு போ என்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றார்.

இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி வீட்டை விட்டுப் போன விஷயத்தை விஜயாவிடம் சொல்ல, அவ பெட்டியவா தூக்கிட்டுப் போனா.. ஹேண்ட் பேக் தானே.. அவ திரும்பி வருவா. .அவளுக்கு நீ போன் பண்ண கூடாது என்று மனோஜ்க்கு கட்டளையிடுகின்றார்.

இதன் போது அண்ணாமலை நான் அப்போதே சொன்னேன் எல்லா மருமகளையும் ஒரே மாதிரி பாரு என்று.. ஆனால் நீ தான் என் பேச்சை கேட்கவில்லை என்று சொல்லுகின்றார்.


இதைத் தொடர்ந்து ஸ்ருதி போனில் காமெடி வீடியோ ஒன்றை பார்த்து சிரிக்கின்றார். அங்கிருந்த மீனாவையும் கூப்பிட்டு காட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த விஜயா வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது நீங்கள் எப்படி சிரிக்கின்றீர்களா என திட்டி அனுப்புகின்றார்.

இதனால் உள்ளே சென்ற ஸ்ருதி, மீனாவை அழைத்து விஜயா உடன் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். ரவி என் கைக்குள்ள தான் இருக்கிறான். இப்படி சண்டை நடந்தால் அம்மா பேச்சை  கேட்க மாட்டான்.. நீங்களும் கவனமாக இருங்கள் என்று மீனாவுக்கு எச்சரிக்கை விடுகிறார்..

இறுதியில் மனோஜ் விஜயாவிடம் வந்து ரோகிணி பாவம் அவருக்கு கால் பண்ணவா என்று கேட்க, வேண்டாம் என ரோகிணிக்கு திட்டிக் கொண்டுள்ளார்.

அந்த நேரத்தில் ரோகிணியும் வந்து விடுகின்றார் . அதன் பின்பு ரோகினி ரூமுக்குச் செல்ல பின்னாலே மனோஜும்  செல்கின்றார். ஆனால் மனோஜை கூப்பிட்ட விஜயா, மறுபக்கம் போகுமாறு அவரை பிரித்து வைத்துள்ளார்.

இறுதியில் ரோகிணி விஜயா ரூமுக்கு வந்து எல்லாம் உங்க பையனுக்காக தான் செய்தேன் என்று மன்னிப்பு கேட்கவும், அவர் ரோகிணியை திட்டி அனுப்புகிறார்.  இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement