பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி, இனியா, செழியன் ஆகியோர் கோபி மீண்டும் பாக்கியாவுடன் இணைந்து வாழ வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அது எப்படி முடியும் என செழியன் கேட்க, உன்ட வாழ்க்கையில் என்ன நடந்தது? மாலினி இடையில் வந்தால் தானே அதற்குப் பிறகு ஜெனி காலில் விழுந்து நீ சேரவில்லையா? என பதிலடி கொடுக்கின்றார் ஈஸ்வரி.
இதை தொடர்ந்து இனியாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த மையூ, தான் காம்படீஷனில் வெற்றி பெற்றதாக கோபிக்கு சொல்லுகின்றார். இதனால் உனக்கு என்ன கிப்ட் வேணும் என்று கேட்ட கோபி நான் போய் ரெடியாகி விட்டு வருகின்றேன் நாங்க வெளியில் ஷாப்பிங் போகலாம் என்று சொல்கின்றார்.
கோபி ரூமுக்கு சென்றதும் அங்கிருந்த ஈஸ்வரி மையூவைத் திட்டுகின்றார். அது மட்டும் இல்லாமல் உனக்கு கோபி அப்பாவா? நீ யாரோ குடிகாரன் பெத்த மகள் தானே என்று சொல்ல, மையூ அழுகின்றார். அந்த நேரத்தில் ராதிகாவும் வந்து விடுகின்றார். இதனால் ராதிகா எதுவும் என்றால் என்னிடம் கேட்க வேண்டியது தானே என்று நாங்கள் ஷாப்பிங் போவோம் என்று அவரை அழைத்துச் செல்கின்றார்.
காரில் செல்லும் போது மையூ அழுது கொண்டிருப்பதை பார்த்து அவரை சமாதானப்படுத்தி கொஞ்ச நாள் டைம் கொடு அதுக்குள் எல்லாவற்றையும் சரி பண்ணி விடுவேன் என்று சொல்லுகின்றார். கோபி ரெடியாகி வந்ததும் இனியாவை அழைத்துச் செல்லுமாறு ஈஸ்வரி அனுப்பி வைக்கின்றார்.
அதன் பின்பு ஈஸ்வரிடம் பாக்கியா, நீங்க செய்வது எல்லாம் தப்பு. இப்படி ஒருவருடைய மனசை புண்படுத்தாதீர்கள் என்று பக்குவமாக எடுத்துச் சொல்லுகின்றார். இறுதியில் கோபி ரூமில் இருக்க, அங்கு வந்த ராதிகாவிடம் தான் இனியாவுடன் வெளியே போய் என்ஜாய் பண்ணியதாகவும் இனியா நிறைய போட்டோ எடுத்ததாகவும் சொல்லுகின்றார்.
மேலும் நான் இனியாவை ரொம்ப மிஸ் பண்ணினேன் என்று சொல்ல, என்ன கல்யாணம் கட்டின பிறகு என்று ராதிகா கேட்கின்றார். அதற்கு ஆமாம் என்று சொல்கின்றார். மேலும் அவர் இனியாவை பற்றி பேசிக் கொண்டிருக்க ராதிகா தனக்கு தலை வலிக்கின்றது என்று தூங்கி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!