சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ், முத்து, ரவி ஆகியோர் தங்களுடைய மனைவிமாருடன் சண்டை பிடித்து விட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்கள். இதன்போது முத்து சொன்ன பஞ்ச் டயலாக் ஒன்றை ரோகிணிக்கு மனோஜ் ஃபோன் பண்ணி சொல்ல, அவர் உடனே இது முத்துவோட டயலாக் தானே என்று திட்டி விட்டு வைக்கின்றார்.
இதைத்தொடர்ந்து அனைவரும் மறுநாள் சாப்பிட அமரும் போது ரோகிணி, ஸ்ருதி ஆகியோர் சாப்பிடாமலே சென்று விடுகின்றார்கள். மீனாவும் முத்து, மனோஜ்க்கு பரிமாறாமல் அண்ணாமலை விஜயாவுக்கு சாப்பாடை பரிமாறி விட்டுச் செல்கின்றார். இதன் போது அண்ணாமலை உங்க பொண்டாட்டிகள் கூட பிரச்சினையா என்று கேட்க, ஆமாம் என்கின்றார்கள்.
ஆனால் என்ன பிரச்சனை என்று சொல்ல முற்படுகையில், உங்க குடும்ப பிரச்சினையை நீங்கதான் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்லுகின்றார். விஜயாவிடமும் இவர்களுடைய பிரச்சினையை பற்றி கேட்க வேண்டாம் என்று சொல்லி செல்லுகின்றார்.
இதை அடுத்து அண்ணாமலையின் அம்மா திடீரென வீட்டிற்கு வருகின்றார். முத்து அவரை அழைத்து வருகின்றார். அவர் ரோகிணியிடம் விசேஷம் ஒன்றுமில்லையா என்று கேட்கின்றார். மேலும் மூன்று பேரும் திருமணம் முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்று சொல்லுகின்றார்.
அந்த நேரத்தில் ரவியின் ரெஸ்டாரன்ட் ஓனர் நீத்து வீட்டுக்கு வருகின்றார். அங்கு காம்படிஷன் வைத்து இருக்கின்றோம் அதில் நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்க, விஜயா குடும்பமும் சரி என சொல்லுகின்றது. அதன்படி அடுத்த நாள் முதலாவது போட்டியாக தண்ணீர் குடத்தை தலையில் வைத்து அது சிந்தாமல் செல்ல வேண்டும்.
அதில் பங்கு கொண்டவர்களில் ஸ்ருதி அவுட் ஆகி விடுகின்றார். இறுதியில் மீனாவும் ரோகிணியும் அந்த போட்டியில் தொடர்ச்சியாக நீடிக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!