• Mar 18 2025

மகனை தனது படத்தில் அறிமுகம் செய்ய மறுத்த இயக்குநர்..! காரணம் என்ன..?

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனியில் இருக்கும் இயக்குநர் ஷங்கரின் சமீபத்தைய பல படங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் எப்பொழுதும் உச்சத்தில் இருக்கும் இயக்குநராகக் காணப்படுகின்றார். இவரது மகள் வைத்தியர் படிப்பை முடித்து விட்டு படம் நடிக்க வந்தார். இருப்பினும் அவரது ஒரு சில படங்கள் மாத்திரமே சிறந்த வரவேற்பினை பெற்றது.


இந்த நிலையில் அவரது மகன் அர்ஜித் ஷங்கர் அவர்களை வைத்து படம் எடுப்பதற்கு தீர்மானித்திருந்தார். ஆனால் தற்போது குறித்த முடிவை மாற்றிய இயக்குநர் தனது மகனின் முதலாவது படத்தினை பிரபு தேவாவினை வைத்து இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த படத்தினை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக ஒரு சில செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் ஷங்கர் மகனை தனது படத்தில் அறிமுகப்படுத்தாமைக்கான அதிகாரபூர்வ செய்திகளும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement