• May 13 2025

என்ன மனுஷன்யா.? பந்தா இல்லாமல் அஜித் செய்த காரியம்.. இணையத்தில் ட்ரெண்டிங் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

அஜித்குமார் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் வசூலில் சரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி  படத்திலும் பிசியாக நடித்து வருகின்றார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் இந்தப் படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாகியுள்ளதோடு இந்த இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் டி ஆர் ராஜேந்திரனும் இதில் பங்கெடுத்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அஜித்குமார் ஏனைய நடிகர்களைப் போல் அல்லாமல் எந்தவித ஆரவாரமும், ரசிகர்கள் மத்தியில் தான் பெரிய ஸ்டார் என்ற கர்வம் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இதனாலையே அதிகளவானோர் அஜித்துக்கு ரசிகர்களாக காணப்படுகின்றார். 

இந்த நிலையில், அஜித்குமாரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகின்றது. அதில் அஜித் குமார்  நபர் ஒருவருக்கு டோர் கதவை திறந்து விட்டு வழி விடுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் இருக்கிற ஒரே மனுஷன் அஜித் தான் என தமது கருத்துக்களை தெரிவித்து   வருகின்றார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement