• May 10 2024

குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் & பிரேமலதா.. மகன்களுடன் கேப்டனின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த், தமது திருமண நாளை முன்னிட்டு டிவிட்டரில் நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.

நடிகரும்,  முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அத்தோடு கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார்.


அத்தோடு 1990-ல் பிரேமலதாவை மணந்த இவருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.


இன்று கேப்டன் விஜயகாந்த், தமது 33-வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றார். மேலும் அவருக்கு பல ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இவ்வாறுஇருக்கையில்  கேப்டன் விஜயகாந்த் தமது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்திய அனைவரும் நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். அத்தோடு  தனது மகன்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். கேப்டனின் தற்போதைய புகைப்படங்கள் அவரது தொண்டர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement