• Jan 19 2025

விஜய் ஆண்டனியை காலையிலேயே வம்பிழுத்த ப்ளூ சட்டை! கழுவி கழுவி ஊத்துறாரே..?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையில் வெளியாகும் படங்களுக்கு விமர்சனம் கொடுத்து பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே எதிர்பார்த்து இருக்கும்.

இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தோல்வியை தழுவிய நிலையில், அந்தப் படங்களை வைத்து செய்திருந்த ப்ளூ சட்டை மாறன்.

இவ்வாறு தமிழில் வெளியான திரைப்படங்கள் அத்தனையுமே தோல்வியை தழுவிய நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழிகளில் வெளியான படங்கள் குறித்து பொசிட்டிவ்  விமர்சனங்களை குறிப்பிட்ட ப்ளூ சட்டை மாறன், தமிழ் படங்களை மட்டும் வச்சு செய்து இருந்தார்.

அதன்படி அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ படம் பற்றியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.


இதை அவதானித்த விஜய் ஆண்டனி, தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ளூ சட்டை போன்ற விஷக் கிருமிகள் சொல்லும் விமர்சனங்களை கேட்காமல் படத்தை நேரடியாகவே சென்று பாருங்கள் என பதிவிட்டிருந்தார். 

இதை அடுத்து ப்ளூ சட்டை மாறனும் விஜய் ஆண்டனியை வெளுத்து வாங்கும் வகையில், அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை, தனது படத்தை பப்ளிசிட்டி பண்ணுவதற்காக விமர்சகர்களை பிராண்டி வருகிறார் என குறிப்பிட்டு இருந்தார்.


இந்த நிலையில், இன்றைய தினம் காலையிலேயே விஜய் ஆண்டனியை வம்புக்கு இழுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன்  தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த போஸ்டரில் 20 வருஷத்துக்கு பின்னர் வெளியான கில்லி படம் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், விஜய் ஆண்டனியின் படம் எடுபடவில்லை என்பதை குறித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது

Advertisement

Advertisement