போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு பெரிய மவுஸை பெற்றுக்கொடுத்தது.
இன்று, தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இவருடைய நடிப்பில் உருவாகி வரும் படங்கள் எல்லாம் விரைவில் வரிசையாக ரிலீசாக உள்ளன.இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார் வரலக்ஷ்மி
யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் வரலட்சுமி பொன்னம்பலம் கருணாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் காட்டேரி
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டே முடிந்து விட்டது என்பதும் இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா?
- சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்- சிம்பு திருமணம் குறித்து பேட்டி
- இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி
- AK 61 படத்திற்கு பின் ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..?
- குக்வித் கோமாளி கடைசி நாள் ஷூட்டிங் போட்டோக்கள் -அட யார் யார் உள்ளார்கள் பாருங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!