• Jan 18 2025

தவிடு பொடியான ரோகிணியின் மாஸ்டர் பிளான்.. விஜயாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை வேலைக்கு போவதாக சொல்ல, முத்துவும்  மீனாவும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் விஜயா மனோஜ் அண்ணாமலை வேலைக்கு போனால் பரவாயில்லை என்பது போல பேசுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ரோகினி பார்வதியிடம் சென்று, வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கின்றது. என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் நகைகளை விற்று விட்டேன் என்று சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, பணம் திருட்டு போகவில்லை அங்கே தான் இருந்தது என்று சொல்லுமாறு சொல்லுகின்றார். 

d_i_a

இதனால் ரோகிணியின் நல்ல குணத்தை நினைத்து பார்வதி பாராட்டுகின்றார். மேலும் நான் கொண்டு வந்த மருமகள் என்று பெருமையாக பேசுகின்றார். ரோகிணி வீட்டுக்கு வந்த பிறகு மனோஜிடம் மூன்று லட்சத்தை கொடுத்து அதனை முத்துவிடம்  கொடுக்குமாறு சொல்லுகிறார்.

அது போலவே மனோஜ் 3 லட்சம் ரூபாயை முத்துவிடம் கொடுக்க, அந்த நேரத்தில் பார்வதி போன் பண்ணி பணம் திருட்டுப் போகவில்லை. அங்கேதான் இருந்தது என்று சொல்லுகின்றார். இதனால் கோபப்பட்ட முத்து அப்படி என்றால் பணம் திருட்டுப் போகவில்லை. மீனா மீது வீண் பழி போட்டு இருக்கு என்று சொல்லுகிறார்.


அந்த நேரத்தில் அண்ணாமலையும் அன்றைக்கு ரோகிணியும் தான் சாப்பாடு வாங்கி தந்து பார்வதி வீட்டுக்கு வந்தா.. அவ மேல உன்னால சந்தேகப்பட முடிந்தத?  இல்ல ஸ்ருதி மேல சந்தேகப்பட முடிந்ததா? ஏழை வீட்டுப் பெண் என்றதால மீனாவ  சந்தேகப்படுறியா என்று மீனாவுக்கு ஆதரவாக பேசுகின்றார்.

மேலும் மீனாவுக்கு அப்பா இல்லை அந்த இடத்தில் நான் இருப்பேன் என்று சொல்ல, மீனா அண்ணாமலை காலில் விழுந்து வணங்கி அழுகின்றார். அதன் பின்பு கிடைத்த மூன்று லட்சத்தில் அண்ணாமலையின் காசை கொடுத்துவிட்டு மீதியை மீனாவின் அம்மா வைத் நகைகளை எடுக்குமாறு முத்து கொடுக்க, வேண்டாம் அதை அவர்கள் பார்ப்பார்கள் நீங்கள் காருக்கு டியூ  கட்டி முடியுங்க என்று சொல்லுகிறார்.

Advertisement

Advertisement