• May 03 2024

விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை, அதை விட்டிட்டு அவரால் வர முடியாது- பகீர் தகவலைக் கிளப்பிய பிரபலம்

stella / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். 90’ஸ்களில் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலம் திரையுலகிற்குள் பிரவேசித்து இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாராக திகழ்கிறார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சந்தித்து பரிசு வழங்கிய விஜய் முதல் முறையில் அரசியல் தொடர்பாக பேசினார்.அத்தோடு அண்மையில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட தன்னுடைய அரசியில் பிரவேசம் குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள மோகன் ஜி ‘ ஒரு சினிமாக்காரனாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் கண்டிப்பாக அரசியிலுக்கு வரமாட்டார். அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கின்றார். அவரால்  அந்த இடத்தை விட்டு விட்டு அவர் இன்னொரு இடத்திற்கு செல்ல மாட்டார். அவர் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார் அவர் தேர்ந்தெடுப்பவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள்’ என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement