• Jan 19 2025

போலீஸ் எஸ்.ஐ.யாக திரிஷா நடித்த ப்ருந்தா ட்ரெயிலர் வெளியானது!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

2000ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான நடிகை திரிஷா தற்போது வரை கதாநாயகியாக அசத்தி வருகின்றார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் போன்றோருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் விதத்தில் நடித்து வரும் திரிஷா., தற்போது ப்ருந்தா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸில் போலீஸ் எஸ்.ஐ.யாக திரிஷா நடித்துள்ளார்.

இந்த நிலையில், ப்ருந்தா வெப் சீரிஸ் தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


இந்த வெப்சீரிஸில் த்ரிஷாவுடன் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன், ஜெயபிரகாஷ், ஆமனி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி ஆகியோர் நடித்தள்ளார்.  

இதேவேளை, ஓடிடி-யில் த்ரிஷா நடித்த வெப்சீரிஸ் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும். 


Advertisement

Advertisement