• Sep 21 2024

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது...இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு’.இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார் சிம்பு. இதில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளனர்.இப் படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி  பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது.இதோ அந்த ட்ரெயிலர்...






Advertisement

Advertisement