கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இணைய தொடர் தான் சூழல். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தை பிரம்மா, அனுசரன் இயக்கியிருந்தனர்.
சூழல் இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமீபத்தில் சூழல் 2 படத்தில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த இணைய தொடர் வரும் 28 -ம் அமேசன் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சூழல் தொடரின் இரண்டாவது பாகத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. குறித்த டீசர் மிகவும் த்ரில்லர் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.
சாம்பலூர் கிராமத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் மாயமாகின்றார். அவரை கண்டுபிடிக்க காவல்துறை ஆய்வாளராக கதிர் களம் இறங்கி உள்ளார். இந்த கதையை மையமாகக் கொண்டே இந்த சூழலை முதல் பாகம் எடுக்கப்பட்டது.
தற்போது வெளியான டீசரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டது போலவும் இதில் ஒன்பது பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றவாளியைத் தேடும் அதிகாரியாக கதிர் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!