• May 10 2024

நடிகர் அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் இயந்திரத்தால் இடித்தழிப்பு! திடுக்கிடும் காரணம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

 'விடாமுயற்சி' படப்பிடிப்பு பல சிக்கல்களை கடந்து பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. தனித்துவ இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இணைந்து  நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை - ஈச்சம்பாக்கம் பகுதியிலுள்ள அஜித்தின் வீட்டுச் சுவர் பொக்லைன் இயந்திரத்தால் இடிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு  ஆகியவற்றிற்காக பல வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அஜித் வீட்டின் சுற்றுசுவரும் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அஜித் குடும்பத்தினர் நேராக கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement