• Jan 18 2025

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய தல அஜித்..! எல்லாம் இதற்காக தான்..வைரலாகும் புகைப்படங்கள்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் குமார், தனது திரைப்படங்கள் மற்றும் கார் பந்தயங்களுக்கான ஆர்வத்தால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். சமீபத்தில், 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டீசர் அஜித்தின் அடுத்தகட்ட திரைப்படத்துக்கான பரபரப்பை கூட்டியுள்ளது.


அதற்கிடையில், அஜித் தனது புதிய படம் 'குட் பேட் அக்லி' திரைப்படத்துக்காக உடல் எடையை குறைத்தார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், அவரது உடல் மெலிந்த சில புகைப்படங்களும் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளன.அஜித், வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதிலும், அவற்றுக்கேற்ப தன்னை மாற்றுவதிலும் மிகவும் சிறந்தவர். இதற்காக, அவர் தனது உடல் மற்றும் தோற்றத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


'குட் பேட் அக்லி', ஒரு தனித்துவமான கதை அமைப்புடன் உருவாகும் படம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, அஜித்தின் வலிமை மற்றும் துனிவு போன்ற படங்களில் அவரது ஃபிட்னஸ் மற்றும் திரைக்காட்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன.


Advertisement

Advertisement