‘அருவி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனிப்பட்ட கவனம் பெற்ற இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், அவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான ‘வாழ்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அவரது அடுத்த முயற்சி, ‘சக்தி திருமகன்’ எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
‘சக்தி திருமகன்’ திரைப்படத்தில் முன்னணி நடிகராக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இவர் இந்த படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார் .
படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பின்படி, ‘சக்தி திருமகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ளது எனவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Listen News!