• May 10 2024

7 ஆண்டுகள் காத்திருந்து படம் இயக்கும் இயக்குநர்- அட இப்படத்தில் இவ்வளவு சுவாரஸ்யமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2019 இல் வெளியாகி ரசிகர்களின் கைதட்டலையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இது வெவ்வேறான நான்கு கதைப்பின்னணியை உள்ளடக்கி மனிதர்களையும் அன்பையும் காதலையும் பேசி ரசிகர்களின் மனதில் பதிந்தது.

இதைத்தொடர்ந்து, இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பூவரசம் பீப்பீ நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் கவனிக்கத்தக்க இயக்குநரானார் ஹலிதா சமீம்.

யதார்த்தமான படைப்புகளை கொடுக்கும் இயக்குநர் ஹலிதா சமீம் இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் நடிப்பில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றி உருவாக்கி வருகின்றார். .

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டே அவர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட மின்மினி திரைப்படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பவற்றை கூறுகின்றது. அதில் குழந்தை காட்சிகளும், மற்றும் அவர்கள் வளர்ந்த பின் காட்சியையும் அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைப்பருவ காட்சிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கிய நிலையில் படத்தில் நடித்த குழந்தைகள் வளர்வதற்காக ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது குழந்தை வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் அந்த படத்தை தொடங்கியுள்ளார் அளித்த சமயம் இந்த படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச தயாரிக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement