பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், இனியா அழுது புலம்பி கொண்டு இருக்க அவரை கோபி சமாதானப்படுத்துகின்றார். ஆனாலும் கோபத்தில் இனியா ரூமுக்கு சென்று விடுகின்றார். அதன் பின்பு அங்கு சென்ற பாக்யா வெற்றி தோல்வியை சமமாக பார்க்க என்ன வேண்டும் இதைவிட உனக்கு பெரிய சான்ஸ் கிடைக்கும் என அவரை சமாதான பண்ணுகின்றார்.
அதன் பின்பு ராதிகா இனியா பேசிய விஷயங்களையும், ஸ்டேஜில் நடந்த விஷயங்களையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு வந்த கோபி நான் இப்படி செய்திருக்கக் கூடாது.. உன்னை கூட்டிப் போயிருக்கக் கூடாது.. இனியா ரொம்ப கஷ்டப்படுரா என்று பேசுகின்றார்.
இதை தொடர்ந்து ராதிகா கிச்சனில் இருக்கும் பாக்யாவிடம் இன்னைக்கு ஒரு நாளைக்கு எல்லாரும் ட்ரிப் போய் வரலாமா என்று கேட்கின்றார். அதற்கு எல்லாரும் சம்மதம் சொல்லனுமே என்று பாக்கியா சொல்ல, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க வந்தா மட்டும் போதும் என்று சொல்கின்றார்.
இதை அடுத்து ராதிகா விஷயத்தை கோபியிடம் சொல்ல, கோபியும் ஒரு வழியாக சரி என்று சொல்லுகின்றார். மேலும் இந்த திட்டத்தை நான் போட்டதாக சொல்ல வேண்டாம் நீங்க போட்ட பிளான் என்று ஈஸ்வரியிடமும் இனியாவிடமும் சொல்லுமாறு ராதிகா சொல்லுகின்றார்.
ராதிகா சொன்னபடியே ஈஸ்வரி இனியாவிடம் பேசிய கோபி இன்னைக்கு ஒரு நாளைக்கு எல்லாரும் அவுட்டிங் போய் வரலாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் இனியாவும் ஈஸ்வரியும் வரவில்லை என்று சொல்லுகின்றார்கள். இதனால் பாக்கியா வருகின்றார் என்று சொல்ல, அதன்பின்பு இனியாவும் ஈஸ்வரியும் வருவதற்கு சம்மதிக்கின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!