• Apr 27 2024

கதை கேட்கும் படலத்தை நிறுத்திய விஜய்.. ‘தளபதி 69’ பட இயக்குனர் இவர்தான்..!

Sivalingam / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தனது 69வது படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கிட்டத்தட்ட 6 இயக்குனர்களுக்கும் மேல் கதை கேட்டது மட்டுமின்றி இன்னும் சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் புதிய இயக்குனர்களிடம் கதை கேட்பதை நிறுத்தி விட்டதாகவும் ஏற்கனவே கதை கேட்ட இயக்குனர்களிடமிருந்து ஒரு இயக்குநரை தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

‘தளபதி 69’ திரைப்படத்தை அட்லி, வெற்றிமாறன், எச் வினோத், திரிவிக்ரம், சசிகுமார், ஆர்.ஜே பாலாஜி, பிரபுதேவா உட்பட சில இயக்குனர்களிடம் கதை கேட்ட விஜய் இன்னும் இயக்குனரை முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு மைனஸ் பாயிண்ட் இருப்பதை புரிந்து கொண்ட விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் உடனே படப்பிடிப்புக்கு செல்லும் வகையில் இருப்பது ஒரே ஒரு இயக்குனர் தான் என்பதை அவர் கோடிட்டு உள்ளார். அவர் தான் எச். வினோத்.

இரண்டாவது இடத்திலிருந்த வெற்றிமாறன் ஏற்கனவே ’விடுதலை 2’ படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் அவர் உடனே படப்பிடிப்புக்கு செல்லும் நிலையில் இல்லை என்பதால் தான் அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தற்போது எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் எச் வினோத் தனது அடுத்த படத்தை இயக்க சரியானவர் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமூகப் பிரச்சினைகளை தெளிவாக அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் படம் எடுப்பவர் எச் வினோத் என்பதால் அவரை விஜய் டிக் செய்து விட்டதாகவும் இனிமேல் அவர் யாரிடமும் கதை கேட்க மாட்டார் என்றும் அடுத்த பட இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement