• Jul 27 2024

’கோட்’ படத்தில் தல தோனி நடிக்கிறாரா? சிஎஸ்கே போஸ்டரால் பரபரப்பு..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இதற்காக நேற்று திருவனந்தபுரம் சென்ற விஜய்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில்கோட்படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு சில செட்டப்புகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் போஸ்டர்களையும் படக்குழுவினர் வைத்திருந்தது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் அதில் விஜய் ஒரு முக்கிய காட்சியில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் கண்டிப்பாககோட்படத்தில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அது மட்டுமின்றி சிஎஸ்கே அணியில் உள்ள சில முக்கிய வீரர்களும் இந்த படத்தில் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தல தோனி மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில் நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் மட்டும் உண்மை என்றால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் படப்பிடிப்பை முடித்தவுடன் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அங்கு இரண்டு பாடல் காட்சி மற்றும் ஒரு அதிரடி ஆக்சன் காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement