பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்ட போது ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அதில் முக்கியமான ஒரு போட்டியளராக தயாரிப்பாளர் ரவீந்தர் காணப்பட்டார். அதற்கு காரணம் இவர் இதற்கு முதல் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் விமர்சித்து சர்ச்சைக்குரியவராக காணப்பட்டார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ரவீந்தர், பல நுணுக்கங்களை கையாள போகின்றார், அவர் இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடிப்பார் என ரசிகர்கள் பல எதிர்பார்த்த போதும் அதனை தவிடு பொடியாக்கும் விதத்தில் ஒரே வாரத்தில் வெளியேறி இருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருடைய மனைவி மகாலட்சுமி ரவீந்தரை வெளியே அனுப்புமாறு பிக்பாஸ் டீமிடம் கோரிக்கையும் வைத்திருந்தார். அதன் பின்பு அவர் எலிமினிட் ஆகி வெளியே சென்றார்.
d_i_a
இதை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த ரவீந்தர், அதில் முத்துவை வெகுவாக பாராட்டி இருந்தார். ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தனது தனிப்பட்ட கருத்துக்களை பாசிட்டிவாக கொடுத்திருந்தார். ஆனாலும் ஒரு கட்டத்தில் இவருக்கும் தர்ஷிதாவுக்கும் இடையில் பிரச்சனை கூட நடந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு ரவீந்தர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் பிக் பாஸில் உள்ள ஸ்மோக்கிங் ரூம் பற்றியும், ரவீந்தரை உருவக் கேலி செய்தவர்கள் பற்றியும் நேரடியாக தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், பிக்பாஸில் ஒவ்வொரு சீசனிலும் ஸ்மோக்கிங் ரூம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் இந்த சீசனில் அதை பற்றி பேசப்படவில்லை.
ரூமில் வைத்து தான் குரூப்பிசம் உருவாகின்றது. அங்கு தான் எல்லாம் டெவெலப் ஆகிறது. அதில் எனது காது படவே 'தடியன் இப்ப வந்து சோறு எடுக்க பாப்பான்..' என பேசுவார்கள். அதைக் கேட்டாலும் அதற்கு ரியாக்ட் பண்ண முடியாது.
இந்த வீட்டுக்குள்ள பாடி ஷேமிங் நிறையவே இருந்துச்சு. ஆனா ஒன்றும் பண்ண முடியாது. என்னை அப்படி பேசியதும் ஒரு ஆண் போட்டியாளர் தான் என ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!