• Sep 21 2024

கவின் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் செய்தி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி டுடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கு கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் கவின். இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டதோடு பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். 

கடந்த சில மாதங்களாக நடிகர் கவின் நடித்து வரும் ‘டாடா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

அத்தோடு 5 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு மீதம் உள்ளது என்றும் அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது 

கவின் நடித்த லிப்ட் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் வெற்றிபெறும் என்று படக்குழுவினர் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.



Advertisement

Advertisement