• Apr 02 2025

எஸ்.கேயின் ஒரு செல்ஃபிக்காக ரவுண்டு கட்டிய மாணவர்கள்! ஆத்தாடி இது அதுல..! SK சிக்கித்தவித்த வீடியோ உள்ளே

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தேர்ந்தெடுக்கும் படங்களும் அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்.கே 23வது பாடத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ்.

இந்தப் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார். இதற்கு அனிருத் இசை அமைக்கின்றார்.


நடிகர் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பம் ஆகியது. 

இந்த படத்தில் முதல் கட்டப் படபிடிப்பு வேலூரில் உள்ள விஐடி கல்லூரியில் நடத்திய நிலையில்,  அதில் சிவகார்த்திகேயன், ருக்மணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், எஸ்.கே 23 படப் பிடிப்புக்காக கல்லூரிக்கு சென்ற சிவகார்த்திகேயனை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி  எடுக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதன்படி அவருடன் செல்பி எடுக்க பல்வேறு ரசிகர்களும் திரண்டதால் அவர் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். 

இதை  அடுத்து அனைவரிடமும் தனித்தனியாக செல்ஃபி எடுக்க முடியாது என்பதால் அனைவரையும் சேர்த்து ஒரு செல்ஃபி  எடுத்து விட்டு காரில் கிளம்பிச் சென்றுள்ளார் எஸ்.கே. தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

இதை வேளை,  தற்போது நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் இளைய தளபதி என்று ஒரு பேச்சும் சமூக வளைத்தளங்களில் ட்ரோல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement