• Apr 27 2024

சிம்புவின் நடிப்பில் வெளியான “பத்து தல” படத்தின் திரை விமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து  நடித்துள்ள திரைப்படம் தான் பத்து தல.இப்படத்திற்கு   ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள நிலையில் இப்படத்தில்  பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் இன்று காலை வெளியானது.

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையுமா என கேள்வி எழுந்தது.. அதே போல் கவுதம் கார்த்திக்கிற்கும் இப்படம் வெற்றியை தேடி தருமா என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி கேட்டகப்பட்ட பல கேள்விகளுக்கு பத்து தல எப்படி பதில் கூறியுள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாருங்க...


அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஏ.ஜி. ராவணன் {சிம்பு } ஆண்டு வரும் ஆட்சியை தகர்த்தெறிய பல முயற்சிகள் இடம்பெறுகின்றது. துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனனும் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்யது அவன் ஆட்டத்தை அடக்க வேண்டுமென முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை.

இவ்வாறுஇருக்கையில் கவுதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக ஏ.ஜி. ராவணனின் கோட்டை கன்னியாகுமாரிக்கு செல்கிறார். அங்கு ஏற்கனவே ஏ.ஜி. ராவணனின் மணல் கொலையை தடுக்க பிரியா பாவனி ஷங்கர் போராடி கொண்டிருக்கும் நேரத்தில் கவுதம் கார்த்திக்கும் அங்கு வருகிறார்.

ஏ.ஜி. ராவணனின் அடியாட்களில் ஒருவராக சேர்ந்ததுடன் நிறுத்தாமல், அவருடைய நம்பிக்கையையும் சம்பாதிக்கிறார் கவுதம் கார்த்திக். இதனால் ஏ.ஜி. ராவணன் கவுதம் கார்த்திக்கிற்கு மட்டும் தன்னுடைய மனதில் இடத்தை கொடுக்கிறார்.


இதன்பின்னர்  ஏ.ஜி. ராவணன் பக்கம் வரை சென்ற கவுதம் கார்த்திக் ஏ.ஜி. ராவணனுக்கு எதிரான ஆதாரங்களை எப்படி திரட்டினார். ஏ.ஜி. ராவணனை கொலை செய்ய முயற்சி செய்து வரும் கவுதம் மேனனின் வலையில் ஏ.ஜி. ராவணன் சிக்கினாரா? உண்மையிலேயே ஏ.ஜி. ராவணன் யார் என்பது தான் படத்தின் மீதி கதை.. 

 கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல. ஆனால் கொஞ்சம் கூட அந்த சயால் தெரியாமல் அழகாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. சில காட்சிகள் மஃப்ட்டி படத்தில் இடம்பெற்றதாக இருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையை தான், தனது இயக்கத்தின் மூலம் திரையில் நமக்கு காட்டியுள்ளார். அதற்க்கு தனி பாராட்டு.


ஏ.ஜி. ராவணனாக வரும் சிம்பு  மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்தை சிம்பு தாங்கிய விதம் பாராட்டுக்குரியது.அத்தோடு  கன்னடத்தில் இந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால், அதை விட ஒரு படி மேலாகவே சிம்பு பத்து தல படத்தில் கலக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

அடுத்ததாக கவுதம் கார்த்திக், நிதானமான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்ட சிறப்பாக நடித்துள்ளார்.


வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு அசத்தல். அரசியல் வாதியின் ஆசை எப்படி இருக்கும் அதற்காக அரசியல் வாதி என்ன செய்வார்கள் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த கதாநாயகி கதாபாத்திரத்தை இதில் அருமையாக வேறொரு கோணத்தில் வடிவமைத்து அதில் பிரியா பவானி ஷங்கரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. அதை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

மேலும் இவர்களை தவிர்த்து டிஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்கிலி, அனு சித்தாரா, மது குருசாமி, சென்றாயன் என அனைவரும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் முழு வேகத்தையும் சிலம்பரசனின் நடிப்பு எடுத்து சென்றுவிட்டது.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு திரையரங்கில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.அத்தோடு  பாடல்கள் மற்றும் பின்னணி இசை செம மாஸ். குறிப்பாக இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி இரண்டிலும் பட்டையை கிளப்பிவிட்டார்.

ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலமாக அமைத்துள்ளது. அதே போல் ஸ்டண்ட் மற்றொரு பிளஸ் பாயிண்ட். மேலும் சிம்புவிற்கு எழுதிய மாஸ் வசனங்கள். அதுமட்டுமின்றி அரசியல் குறித்து பேசப்பட்ட வசனங்களும் அருமை. எடிட்ங் முதல் பாதியில் சில லாக், மற்றபடி பக்கா.  


பிளஸ் பாயிண்ட்


சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக்  சூப்பர் நடிப்பு

கவுதம் மேனன், பிரியா பவானி ஷங்கர்

பின்னணி இசை

மஃப்ட்டி படத்தின் ரீமேக் என்றாலும், புதிய திரைக்கதையை வடிவமைத்த விதம்

ஆக்ஷன் காட்சிகள்


மைனஸ் பாயிண்ட்

முதல் பாதி


மொத்தத்தில் பத்து தல பக்கா மாஸ் 

Advertisement

Advertisement

Advertisement