• Feb 25 2025

சிவகார்த்திகேயனைப் போல யாராலும் வர முடியாது! - நடிகரின் உருக்கமான பேச்சு!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் ஷாம் சமீபத்தி பேட்டி ஒன்றில் கதைத்த வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளது. அதன்போது தனது புதிய படமான ‘அஸ்திரம்’ பற்றிக் கூறியதுடன் தனது திரையுலகப் பயணம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றியும் அவர் பேசியுள்ளார்.


அதில் ஷாம் கூறுகையில், “நான் 12 B படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக 4 படங்களில் நடித்ததாக கூறினார். எனினும் அந்த நேரத்தில் சில தவறுகளை செய்தேன் அதை மீண்டும் செய்யமாட்டேன் என்றார். மேலும் திரையுலகில் நிலைத்திருக்க சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும்” என்றும் ஷாம் கூறியுள்ளார்.

அத்துடன், நடிகர் சிவகார்த்திகேயன் பற்றியும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், “சிவகார்த்திகேயன் சாதாரணமாக திரைக்கு வரவில்லை என்றதுடன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பிறகு டான்ஸ் ஷோக்களில் பங்கேற்று, தனது முயற்சி மற்றும் கடின உழைப்பாலேயே  இன்று முன்னணி நடிகராக மாறியுள்ளார்” என்றார்.


மேலும் ஷாம் , தனது நடிப்பில் வெளிவர உள்ள ‘அஸ்திரம்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாகவும் கூறினார். அத்துடன், படக்குழுவினர் இதற்காக செய்தியாளர்களை சந்தித்த போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் குறித்து பேசியுள்ளனர்.

அதன்போது, “இந்த படம் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இதை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்று ஷாம் உற்சாகமாக தெரிவித்துள்ளார். நடிகர் ஷாம் தனது திரையுலகப் பயணத்தில் முன்னேறி புதிய தீர்மானங்களை எடுத்து திரையுலகில்  உறுதியுடன் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement