• Apr 16 2025

"என் மிகப்பெரிய பலம் இவங்க தான்.." வைரலாகும் நடிகர் அதர்வாவின் பதிவு..!

Mathumitha / 6 days ago

Advertisement

Listen News!

பானாகாத்தாடி ,பரதேசி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அதர்வா தற்போது இதயம் முரளி ,பரதேசி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். ஒரு காலத்தில் அதிக படங்களை தொடர்ந்து நடித்து வந்த இவர் சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.


குறித்த பதிவில் "என் மிகப்பெரிய பலம்;அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள்; சந்திரனுக்கும் மீண்டும் உங்களுக்கும் அன்பு" என கூறி அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார். மேலும் அவரது சிறிய வயதில் தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.


இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் ஒரு சிலர் "அம்மா சந்தூர் அம்மா மாதிரி இருக்காங்க, ரொம்ப அழகா இருக்கு படம், என் மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement