• Jan 19 2025

டாட்டூஸ் வரைய வேற இடமே கிடைக்கலையா? சீரியல் நடிகை கீர்த்திகாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா புதிதாக டாட்டூ வரைந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் டாட்டூ வரைய வேற இடமே கிடைக்கலையா என ரசிகர்கள் இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’மெட்டி ஒலி’ என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிருத்திகா. அதன் பின்னர் ’கேளடி கண்மணி’ ’செல்லமே’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக வில்லி கேரக்டரில் இவர் நடித்து அசத்தி உள்ளார்.



சின்னத்திரை சீரியல் மட்டுமின்றி ’மானாட மயிலாட’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு உள்ளார். அதேபோல் சன் டிவி மட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சின்னத்தம்பி’ சீரியலிலும் வில்லியாக நடித்தார் என்பதும் அவரது நடிப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்தது என்பது பலர் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகை கிருத்திகா சில வருடங்களுக்கு முன் அருண் சாய் என்பவரை  திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் தற்போது அவரது மகனுக்கு ஏழு வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தின் முன் கருப்பு நிற கவுனில் ஒய்யாரமாக அமர்ந்து கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் இந்த புகைப்படத்தில் அவர் மார்பு பகுதியில் டாட்டூஸ் வரைந்து உள்ளதை பார்த்த ரசிகர்கள் டாட்டூ வரைய வேற இடமே கிடைக்கலையா என அந்த புகைப்படங்களை பார்த்து கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement