• Sep 30 2023

ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு கொடுத்த பதில்... போட்டுத் தள்ள ஆளை ரெடி பண்ணிய குணசேகரன்.. புலம்பும் ஜனனி... விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஈஸ்வரி "நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் காலம் உணர்த்தும் என்ற வார்த்தைகளை பதிலாய் உணர்த்தும் என்று ஏற்றுக்கொள்ள சொல்கிறாரு அந்த ஜீவானந்தம்" என தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்.


அதேபோன்று குணசேகரன் "ஏய் ஜீவானந்தம் உன்னைக் கிள்ளி எறியிறதற்கு கில்லி போல ஒருத்தன் தயாராகிட்டு இருக்கான்" என்கிறார்.


மறுபுறம் ஜனனி "ஜீவனந்தத்தை தேடுறவங்களையும், பாதிக்கப்பட்டவங்களையும் சந்திச்சும் பலனில்லை, ஆனால் எங்ககிட்ட பலம் இருக்கு, தேடிப் பிடிக்கிறேன்" என சக்தியுடன் புலம்பிக் கொண்டு செல்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement