• Jan 19 2025

இந்தியன் 2 வணிக ரீதியாக வெற்றிப் படம்.. 200 கோடிய எப்பவோ எடுத்துட்டாங்க..! பிரபலம் பகிர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக காணப்படுகின்றது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் படு மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவில்  கிடைக்கவில்லை. ஐந்தாவது நாள் வசூல் கிட்டத்தட்ட 65 கோடி என்ற தகவல்களும் வெளியாகியிருந்தன. இது இந்தியன் 2 திரைப்படத்திற்கு வசூல் ரீதியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்பதை வெளிக்காட்டும் முகமாக காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இந்தியன் 2 படம் வணிக ரீதியாக வெற்றி என தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், இந்தியன் 2 படம் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் வணிக ரீதியில் அந்த படம் வந்து நிச்சயமாக தோல்வி படம் கிடையாது.

இந்தியன் 2,3 படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துள்ளார்களாம். அதன்படி ஒரு படத்திற்கு அதாவது இந்தியன் 2 படத்திற்கு சுமார் 250 கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதுல 90 பர்சன் எடுத்துட்டாங்க. டிஜிட்டல் என்ற பெயரில் 125 கோடி  நெட்லிபிளிக்ஸ் தளத்துக்கு  வித்துட்டாங்க. 68 கோடியை சேட்டிலைட் என்று கலைஞர் டிவிக்கு வித்துட்டாங்க. ஆக மொத்தம் 200 கோடியளவில் விட்ட காசை மீண்டும் எடுத்துட்டாங்க. 

இதனால் இவர்களுக்கு வர வேண்டிய தொகை வெறும் 50 கோடி தான். அதில் கர்நாடாகவே 15 கோடிக்கு வித்துட்டாங்க. மிச்சம் 35 கோடி தான்..

அதுக்கு தமிழ் நாடு, கேரளா, ஹிந்தி தியேட்டர்களுக்கு ரைட்ஸ் இருக்கு. இதனால் இந்த படம் வணிக ரீதியா வெற்றி தான் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement