• Jan 19 2025

இதுக்கு தான் நடிப்பை விட்டு எஸ்கேப் ஆனீங்களா? இப்போ இப்படி பில் போடுறீங்களே!!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் பிரியங்கா நல்காரி. அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ராம் சீதா ராம் சீரியலில் கலக்கியிருந்தார். இந்த  சீரியலில் இவரது கேரக்டர் மிகவும் ரசிக்கப்பட்டது.

மலேசியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்து செட்டில் ஆன பிரியங்கா, அதற்குப் பிறகு ஒரு சில மாதங்களிலேயே தனது கணவரை பிரிந்தார் என செய்தி பரவியது.

எனினும் சிறிது காலங்களிலேயே மீண்டும் கணவருடன்  இணைந்து விட்டார். அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

தற்போது இவர் இறுதியாக நடித்து வந்த நள தமயந்தி சீரியலிலும் இவரது கேரக்டருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் சீரியலில் இருந்து விலகினீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்க, நான் விலகவில்லை இந்த கேரக்டருக்கு அடுத்த அத்தியாயம் வரும் வரை காத்திருக்கிறேன் என பதிலடி கொடுத்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது மலேசியா தலைநகரமான கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றை திறந்து உள்ளார் பிரியங்கா நலக்காரி அதில் பில் வேலை செய்து கொண்டுள்ளதாக அவர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நடிப்பை விட்டு விட்டு பில் போட சென்று விட்டீர்களா? என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement