தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் அஞ்சலி கற்றது தமிழ் திரைப்படத்தில் முக்கிய நாயகியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான 'அங்காடி தெரு', 'தூங்கா நகரம்', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.
சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டூ கெதர் லைப்பில் வாழ்ந்திருந்தார்.பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தற்பொழுது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
பொதுவாக நடிகைகள் செல்லப் பிராணி வளர்ப்பது வழக்கம். அப்படி நடிகை அஞ்சலி தனது வீட்டில் போலோ என்ற பெயரில் ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறார். இது மால்திஸ் என சொல்ல கூடிய ஒருவகை நாய் இனமாகும். இது இந்தியாவில் ₹40,000 முதல் ₹90,000 வரை விற்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!