• Apr 26 2026

கருத்து சொன்னா கல்லெறிவீங்களா? - மர்ம நபர்கள் கைவரிசை! ஜேம்ஸ் வசந்தன் காருக்கு என்னாச்சு?

shali / 2 hours ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குறித்து தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பெயர் பெற்ற இவர், சமீப காலமாக அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் திறந்தவெளியில் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக, விஜய் குறித்து அவர் வெளியிடும் விமர்சனங்கள் அடிக்கடி கவனம் பெற்று வருகின்றன.


இந்நிலையில்,  ஒரு ஹோட்டலில் உணவருந்தச் சென்றிருந்தபோது, ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி, பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வன்முறை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement