நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை RJ பாலாஜி எழுதி இயக்கியதுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது அவர் முதன்முதலில் கமிட் ஆன படம் என்றாலும், பின்னர் அவர் பணியாற்றிய சில படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் “கருப்பு” படத்தின் இசைக்கும் தனியான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இன்று மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறுகின்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் எடிட்டர் படத்தைப் பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “இந்த படம் முழுக்க முழுக்க மாஸாக இருக்கும். ஜாலியான காட்சிகளும், அதே நேரத்தில் கண்களுக்கு விருந்தாக இருக்கும் விஷுவல்களும் ரசிகர்களை கவரும். திரையரங்கில் பார்க்க வேண்டிய தரமான அனுபவமாக இது இருக்கும்” என உற்சாகமாக தெரிவித்தார்.
மேலும், சூர்யாவின் ரசிகராக இருந்து அவருடன் இந்த படத்தில் பணியாற்றியது தனது வாழ்க்கையின் பெருமையான தருணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். விரைவில் டிரெய்லர் வெளியாகவுள்ளது என்றும், அதற்கான பணிகள் மாஸாக நடைபெற்று வருகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!