தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தனுஷ், தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் தனது 55வது படமான D55 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் முன்பு இயக்கிய Amaran திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தை Wunderbar Films மற்றும் AK Teck Studios இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி தோன்ற உள்ளார். இப்படத்தின் இசையமைப்பை சாய் அபயங்கர் மேற்கொள்கிறார்.
தற்போது இந்த படத்திற்கான இசை பணிகளில் சாய் அபயங்கர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Listen News!