• Jul 18 2025

பாக்கியா போற இடமெல்லாம் விடாமல் அடிவிழுதே...!! என்ன செய்தாலும் சரிவராது போலயே....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் பாக்கியான்ர ஹோட்டலைப் பாத்து இது அவளுக்குத் தேவைதான் என்று சொல்லுறார். அதனை அடுத்து பாக்கியா ஹோட்டலை நக்கலடித்து செழியனுக்கு சொல்லுறார். அதைக் கேட்ட செழியன் அம்மா கண்டிப்பா கொஞ்ச நாளில நல்ல இடத்திற்கு வந்திருவா என்கிறார். இதைத் தொடர்ந்து சுதாகர் பாக்கியாவப் பாத்து எனக்கு உங்கட புது ஹோட்டலுக்கு வாழ்த்து சொல்லனும் போல இருக்குத் தான் ஆனா சொல்ல முடியல என்கிறார்.

மேலும் ஓரளவுக்கு வசதியான இடத்தில ஹோட்டல் எடுத்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டு இந்த புதுக் ஹோட்டல் வாங்கினதால என்னோட கெளரவத்திற்கு பிரச்சனையா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா என்ர ஹோட்டலால உங்கட கெளரவம் கொஞ்சமும் குறையாது என்று சொல்லுறார். பின் செழியன் பாக்கியா அப்படி சொன்னதிற்கு சுதாகர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அங்க இருந்து கிளம்புறார்.


அதனை அடுத்து பாக்கியாட ஹோட்டலுக்கு கவுன்சிலர் வந்து லேடீஸ் ஆரம்பிக்கிற ஹோட்டல் என்றால் சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமே என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா சந்தோசப்படுறார். பின் அங்க இருந்து புறப்படுறார். அதனை அடுத்து ஓனர் இவன் ஹோட்டலுக்குள்ள வந்தால் நீங்க ஒழுங்கா வேலை பண்ண முடியாது என்று சொல்லுறார்.

அதைக் கேட்ட செல்வி இது என்ன புதுப் பிரச்சனையா இருக்கு என்கிறார். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஏன் இனியா மாமனாரிட  முகத்தில அடிச்ச மாதிரி பதில் சொன்னீ என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா என்ன நடந்தாலும் ஏன் என்னையே குறை சொல்லுறீங்க என்கிறார். மறுநாள் ஈஸ்வரியை ஹோட்டலுக்கு வரச் சொல்லி பாக்கியா சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி நான் அங்க வரமாட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement