• May 28 2026

குடும்பத்தைக் கவனிக்கிற பெண்கள்… தங்களை மறந்தால் இதுதான் நிகழும்... அபிராமி ஓபன்டாக்.!

shali / 6 hours ago

Advertisement

Listen News!

நடிகை அபிராமி சமீபத்தில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து பகிர்ந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, 35 வயதை கடந்த பெண்கள் தங்களது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவரது அறிவுரை பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.


அபிராமி கூறுகையில், 40 வயதை நெருங்கும் காலகட்டத்தில் பெண்களின் உடலில் கல்சியம் அளவு குறைவதுடன், தசை வலிமையும் மெதுவாக குறைய தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இதனுடன், மெனோபாஸ் முன்பட்ட பருவம் மற்றும் அதன் பின்னர் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற மாற்றங்களை ஆரோக்கியமாக சமாளிக்க பெண்கள் சிறிய வயதிலிருந்தே உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் மனநல கவனம் ஆகியவற்றை வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, எலும்பு ஆரோக்கியத்திற்காக கல்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், “குடும்பத்தை கவனிப்பதற்காக பெண்கள் தங்களை புறக்கணிக்கக் கூடாது. தங்களது உடல் மற்றும் மனநலனுக்காக நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம்” என்று அபிராமி தெரிவித்த கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement