சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த 'தாய் கிழவி' திரைப்படம் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வருகிறது. ராதிகாவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த படத்தில் ராதிகா சரத்குமாருடன் முனிஷ்காந்த், சிங்கம்புலி, அருள்தாஸ், முத்துக்குமார், பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி உலக அளவில் வெளியானது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு திரையரங்குகளிலும் கூட்டங்கள் அலைமோதியன.

இந்த படத்தில் சென்டிமென்ட், எமோஷன் மற்றும் காமெடி என அனைத்து வகைகளிலும் இயக்குநர் கலக்கியுள்ளார். அதிலும் ராதிகாவின் நடிப்பு வேறு லெவலில் காணப்பட்டது. அவரது மேக்கப்பும் கச்சிதமாக பொருந்தி "இது ராதிகாவா?" என வியந்து பார்க்கும் அளவிற்கு கொண்டாடப்பட்டது.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் அதற்கு பல மடங்கு லாபத்தை சம்பாதித்துள்ளது. இதுவரை 80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'தாய் கிழவி' திரைப்படம் சுமார் 150 திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வெற்றி கண்டதாக சிவகார்த்திகேயனின் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ரசிகர்கள் கொண்டாடும் படமாக 'தாய் கிழவி' திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Listen News!