• May 16 2026

காசு இருந்தா யார் வேணா நடிக்கலாமா.? லெஜெண்ட் சரவணன் படத்தை விமர்சித்த நடிகர் ஜெகன்

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெகன் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லெஜெண்ட் சரவணன் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது. “லெஜெண்ட் சரவணன் கிட்ட காசு இருக்கு அதனால தான் படம் நடிக்கிறார் என்று பலர் சொல்வார்கள். ஆனால் அதுவே உண்மை. ஒரு படம் எடுக்கவும், அதில் நடிக்கவும் பணம் தான் முதன்மை. கலை, திறமை எல்லாம் அதற்குப் பிறகு வரும் விஷயங்கள்.” என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


மேலும், “ஒருவருக்கு நடிக்கத் திறமை இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் படம் தயாரிக்கவும், அதை வெளியில் கொண்டு வரவும் மூலதனம் அவசியம். பணமில்லாமல் சினிமாவில் எதுவும் நடக்காது.” என்றும் ஜெகன் கூறியுள்ளார். அவரது இந்த நேர்மையான கருத்து பலரிடமும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சிலர் ஜெகனின் கருத்தை ஆதரித்து, சினிமா ஒரு பெரிய தொழில் என்பதால் முதலீடு மிக முக்கியம் எனக் கூறுகின்றனர். அதே நேரத்தில், சிலர் கலைக்கும் திறமைக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், லெஜெண்ட் சரவணன் தற்போது நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், ஜெகனின் இந்த கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement