• May 28 2026

கல்யாணம் எல்லாம் முடிஞ்சுடுச்சா? அர்ஜுன் தாஸ் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..

shali / 10 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரலும், தனித்துவமான நடிப்பும் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்களில் முக்கியமானவர் அர்ஜுன் தாஸ். குறிப்பாக, 'கைதி' திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த திரைப்படம் அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் வெளிப்படுத்திய நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதை பெற்றதுடன், பல்வேறு திரைப்பட விருதுகளையும் கைப்பற்றினார்.


இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் போன்ற முன்னணி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும், பல படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது கைவசம் Once More ஆகிய திரைப்படங்கள் உள்ளன. 

இந்த சூழலில், அர்ஜுன் தாஸ் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளதாகவும், ஒரு நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவின. மேலும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ஜுன் தாஸின் மக்கள் தொடர்பு மேலாளர் யுவராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. எந்த செய்தியையும் வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் வெளியாகியுள்ளதால், சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement