• Jun 25 2026

க்ரிஷ் சொன்ன ஒரு வார்த்தையில் உடைந்த ரோகிணி.. சிந்தாமணிக்கு நேரடியாக சவால் விட்ட முத்து

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், பொய் சொன்னதற்காக கிரிஷை கண்டபடி திட்டுகிறார் ரோகிணி. பின்னர், "இதையெல்லாம் யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய்?" என்று கேட்டதும், உடனடியாக கிரிஷ், "உன்னிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். நீதான் மனோஜ் அப்பாவிடம் பொய் சொல்லச் சொல்லிக் கொடுத்தாய்" என்று கூற, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

அதற்கு பிறகு,  வெளியில் இருந்து கதறி அழுகிறார் ரோகிணி. இதனால் ரோகிணியின் அம்மாவும், "நாம் செய்த பாவங்கள் எல்லாம் எப்படியும் நம்மைத் தாக்கும். நீ ஒரு குடும்பத்தையே பொய் சொல்லி ஏமாற்றியதற்கான பலன்தான் இது. இனியாவது கிரிஷுக்காக வாழு" என்று கூறுகிறார். இதைக் கேட்ட ரோகிணி தனியாக அமர்ந்து யோசிக்கிறார்.

இன்னொரு பக்கம், வீட்டிற்கு வந்த முத்து, சத்யாவின் திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக கூறுகிறார். இதை வீட்டாரிடம் தெரிவிக்க, அண்ணாமலை இந்த விஷயத்தை சிந்தாமணியிடம் சொல்லுமாறு கூறுகிறார்.


ஆனால், "அவர்கள் வந்தால் பிரச்சனையாகிவிடும்" என்று முத்து கூறுகிறார். அதற்கு அண்ணாமலை, "என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்தக் கல்யாணத்தை ரேகா வீட்டிற்கு தெரியாமல் நடத்தக்கூடாது" என்று கூறுகிறார். இதையடுத்து முத்துவும் மீனாவும் சிந்தாமணி வீட்டிற்குச் செல்கின்றனர்.

அதன்படி, அங்கு தாம்பூலத் தட்டுடன் மீனா செல்கிறார். அங்கு சென்று  ரேகாவின் திருமணம் பற்றி பேச, சிந்தாமணி கோபத்தில் தாம்பூலத் தட்டை தட்டிவிடுகிறார். அத்துடன், "என்னை மீறி இந்தக் கல்யாணம் நடக்காது" என்று கூறுகிறார். ஆனாலும், "இந்தக் கல்யாணத்தை நடத்திக் காட்டுவேன்" என்று முத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement