• Jun 25 2026

சிதம்பரத்தின் மாஜிக் வேலை செய்யலையா? ‘பாலன் - தி பாய்’ மொத்த வசூல் விபரம் இதோ.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் மீண்டும் இயக்கியுள்ள புதிய படம் ‘பாலன் - தி பாய்’ தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானராக உருவாகியுள்ள இந்த படம், வெளியான நாளிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படத்தில் பாலன் - தி பாய் முக்கிய கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல் மற்றும் டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் அமைத்துள்ளார்.


ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், ஜூன் 19-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது கிடைத்த தகவலின் படி, படம் முதல் 6 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.20.42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் நிலை, படம் நிலையாக ஓடினால் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்தின் முந்தைய படத்தின் வெற்றியால் உருவான எதிர்பார்ப்பை இந்த படமும் ஓரளவு பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கதையின் திருப்பங்கள், பின்னணி இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை பாராட்டைப் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் நாட்களில் வசூல் எப்படி மாறும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Advertisement

Advertisement