• Jun 25 2026

திருமண வாழ்க்கை சர்ச்சை; ஆன்மிகத்தை நாடியோடும் பிரபலங்கள்..! ஹன்சிகாவின் திடீர் விசிட்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் கதாநாயகியாக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

அல்லு அர்ஜுனுடன் இணைந்து தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா, அதன் பின்னர் தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், 2007 முதல் 2019 வரை தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

சமீப ஆண்டுகளில் அவரது திரைப்பயணம் முந்தைய வேகத்தை இழந்திருந்தாலும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இதற்கிடையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி பேசுபொருளாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா, சில ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடமிருந்து சட்டப்படி பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. கடந்த மார்ச் மாதம் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், ஆன்மிகப் பயணத்தில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா இன்று தனது தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை கொடுத்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.. அதிகாலை நேரத்தில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பக்தர்களுடன் எளிமையாக பழகியதாக கூறப்படுகிறது.

திருப்பதி கோவில் வளாகத்தில் ஹன்சிகாவைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான உடையில் வந்திருந்த அவரது தோற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது திருப்பதியில் எடுக்கப்பட்ட ஹன்சிகாவின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. திரையுலக பிரபலமாக இருந்தாலும், எளிமையுடன் ஆன்மிக தரிசனத்திற்கு வந்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement