• Jun 25 2026

இதுவும் லவ் சிக்னலா? த்ரிஷா கொடுத்த ரொமான்ஸ் டச்.. கடும் குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக முதல்வர் விஜய் ஜோசப்பின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை த்ரிஷா பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. முதலில் கேக் வெட்டும் கொண்டாட்டப் புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

முதல்வர் விஜய் ஜோசப்பின் பிறந்தநாளுக்கு அரசியல், சினிமா மற்றும் ரசிகர் வட்டாரங்களில் இருந்து வாழ்த்துகள் குவிந்த நிலையில், நடிகை த்ரிஷா கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலில் வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை அவர் நேரடி வாழ்த்து பதிவை வெளியிடாமல், பின்னர் கேக் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் பெரும் வைரல் அலையை ஏற்படுத்தினார்.

அந்த புகைப்படங்களில் விஜய் ஜோசப்புடன் கேக் வெட்டி கொண்டாடும் தருணங்களும், த்ரிஷா வழங்கிய பலவிதமான கேக்குகளும் இடம்பெற்றிருந்தன. இந்த பதிவுக்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள புதிய பதிவுகள் தற்போது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளன. அதில் முதலில் வெளியான புகைப்படத்தில், வானத்தில் கருமை மேகங்கள் திரண்டு வருவது போல அமைதியான ஆனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்துடன் “முன்பே வா என் அன்பே வா” என்ற பாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அதே இடத்தில் வானிலை முழுமையாக மாறி மழை பொழிவது பதிவாகியுள்ளது. இயற்கையின் மழை ஒலி, வீடியோவின் பின்னணி இசையுடன் இணைந்து பார்க்கும் நபர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் அந்த வீடியோவில் நீச்சல் குளத்தில் மழைநீர் விழும் காட்சியும் ஸூம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது ஒரு உயர்தர ஹோட்டல் அல்லது ரிசார்ட் என சமூக வலைதளங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் அந்த இடம் எங்கு உள்ளது என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

நேற்று கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், இன்று இயற்கை சார்ந்த வீடியோ பதிவை த்ரிஷா பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “முன்பே வா… அன்பே வா” பாடல் தேர்வு செய்திருப்பது யாரை குறிக்கிறது என்பதும் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.

இதனால் த்ரிஷாவின் இந்த தொடர்ச்சியான பதிவுகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

Advertisement

Advertisement