• Apr 19 2026

அட்லி இல்லாமலே ரூ.1000 கோடி பிசினஸ்.. அட்லியுடன் சேரும் அடுத்த படம் ரூ.2000 கோடியா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’ஜவான்’ திரைப்படம்  ரூ.1000   கோடி வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்த படத்தின் பிசினஸ்  ரூ.1000   கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்க இருக்கும் அட்லி படம் ரூ.2000 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தற்போது ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் குறிப்பாக அனைத்து பிசினஸ்களும் சேர்ந்து கிட்டத்தட்ட  ரூ.1000  கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.



அதற்கு ஒரே காரணம் சமீபத்தில் வெளியான டீசர் தான் என்றும் இந்த டீசர் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பின்னர் தான் பிசினஸ் எகிறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அல்லு அர்ஜுன் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் ’புஷ்பா 2’ படமே  ரூ.1000  கோடி பிசினஸ் என்றால் கண்டிப்பாக அல்லு அர்ஜுன், அட்லி, மற்றும் அனிருத் இணையும் படம் ரூ.2000  கோடியை நெருங்கும் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் அட்லி சென்ற இடமெல்லாம்  ரூ.1000  கோடிக்கு அதிகமான பிசினஸ் உள்ள படம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் இந்திய திரை உலகின் உச்சத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement