தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், தொடர்ந்து தரமான கதைகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் இதற்கான சிறந்த உதாரணமாகும்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இந்த படம், காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்துடன் வெளியானது. விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. சுமார் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு தற்போது ‘கட்டா குஸ்தி 2’ எனும் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இந்த படத்தையும் செல்லா அய்யாவு இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். முதல் பாகத்தில் ரசிகர்களை கவர்ந்த அதே ஜோடியாக விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் போன்ற திறமையான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் காமெடி டைமிங் மற்றும் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று மாலை 4.07 மணியளவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு படம் குறித்த கூடுதல் தகவல்கள், கதைக்களம் மற்றும் வெளியீட்டு தேதி போன்றவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் சண்டை ஒரு வழியா முடிஞ்சிருச்சு✍️
— Vishnu Vishal Studioz (@VVStudioz) May 15, 2026
ஆனா இந்த சண்டைக்கு முடிவே இல்லை 🤼 #GattaKusthi2 - First Look today at 4.07PM.
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu.
An @RSeanRoldan musical.@IshariKGanesh @TheVishnuVishal #AishwaryaLekshmi… pic.twitter.com/Bewouhfw9f
Listen News!