• May 16 2026

‘இரும்புத்திரை’ ரிலீஸுக்காக பிரபு செய்த உதவி.. பல வருட ரகசியத்தை உடைத்த விஷால்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்பு, நன்றி மற்றும் தொழில்முறை மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் விஷால். தற்போது அவர் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதில், தனது வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாக தயாரிப்பாளர் S. R. பிரபு செய்த உதவியை ஒருபோதும் மறக்க முடியாது என விஷால் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் தகுந்த வெற்றியை நீங்கள் பெற்றுள்ளீர்கள்” என்று எஸ்.ஆர்.பிரபுவை பாராட்டியும் பதிவிட்டுள்ளார்.


இதனுடன், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்கும் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தை R. J.பாலாஜி இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும், தரமான கதைக்களம், சிறப்பான நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ‘கருப்பு’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறாக, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement